
(அழகிய சிங்கர்
என்பா !)
- தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
லட்டு செய்வது பெரும் பாடு
எங்கள் வீட்டில் ரவாலாடு மட்டுமே !
எனக்குப் பிடித்ததோ அல்வா ! - தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
ஆசை இருந்தால் மட்டும் போதுமா ?
யார் அதை செய்து
தருவார்கள் ?
நான் அதை சுவைக்க ! - தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
எனக்கு லட்டு பிடிக்கவே பிடிக்காது!
வீட்டாருக்கு லட்டு மட்டுமே பிடிக்கும்
எனக்கு ஏது ரசகுல்லா ! - தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
லட்டு, ஜிலேபி அனைத்தும் வேண்டும் !
கூடவே காராசேவ், தேன்குழல், தட்டை
யார் பண்ணித் தருவார்கள்? - தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
இனிப்பு வகைகள் பல இருந்தும்
லட்டுக்கு ஏன் தனி சிறப்பு ?
அம்மா செய்வதோ பாதுஷா !
10/11/2023
