“தீபாவளி”/மீ. விசுவநாதன்

“எண்ணற்ற நல்லோரைக்
காயப்படுத்திய
நரகாசுரத்
தீயோனை
மண்ணற்று போக
எண்ணி
கைச்சக்கரத்தால்
தலையறுத்து
விண்ணுறச் செய்தான்
விஷ்ணு எனும்
தூயோன்!
அவனே
கண்ணன் எனும்
மாயோன்!

ஊமையாய் நில்லாமல்
உண்மைக்குக்
காவலாகித்
தீமையை எரிக்கும்
தீயே
தீப ஒளி!

பிழை செய்த
அசுரன் தன்
இறுதி மூச்சில்
விழைந்த
வேண்டுகோளைக்
காதலால்
ஏற்றுக்
கருணையைக் காட்டியுது
விஷ்ணுவின்
கோபவிழி
அதுவே
தீப ஓளி!”

(இன்று – 12.11.2023 தீபாவளித் திருநாள்)
(12.11.2023 03.51 am)