செந்தில் பிரசாத்/தீப திருநாள் வாழ்த்துகள்

#

“வாழ்த்துகள்”
கவிதையாய் வர
எப்போதோ
எழுத ஆரம்பித்து விட்டேன்,
எப்படி வருமோ?
மனைவி சுட்ட
லட்டு
நன்றாக வந்தது,
மகன் சுட்ட
பட்டாசு
சத்தமாக வெடித்தது,
மகள் விட்ட
சங்கு சக்கரம்
அழகாய் சுற்றியது,
என் கவிதை
எப்படி வருமோ!
பயந்துக்கொண்டே எழுதினேன்,
இருந்தும் பயனில்லை,
கை தட்டல்களுக்கு
அது போதவில்லை,
கை குலுக்கல்களுக்கும்
அது ஏற்றதாயில்லை.
அடுத்த தீபாவளிக்காவது
முறையாய் எழுத
ஆரம்பிக்க வேண்டும்
இன்றே முயற்சிக்கிறேன்…

நல் உள்ளங்கள் அனைவருக்கும்
தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.