சுரேஷ் ராஜகோபால்/தீபாவளி திருநாள்

வடிகிறது மகிழ்ச்சி வெள்ளம்
வலுவிழந்தது ஆரவாராம்
வெடிச் சத்தம் காத்திருக்கு
விடிகிறது காலை நேரம்…!

கொண்டாட்டங்கள் தீரும்போது
குப்பைகளே மிச்சமென்பேன்
திண்டாடும் எண்ணங்களே
தினசரி வாழ்க்கை என்பேன்…!

அன்றாடம் வேர்வைத்துளி
அதிலேதான் நீ பயனி
அல்லாடும் வாழ்க்கையிலும்
அலுக்காமல் நீ பயணி….!

இனிய தீபாவளி தந்திடும்
அளவில்லா மகிழ்ச்சி
இன்பமோடு கொண்டாடு
எதிர்காலம் ஒளிமயம்….!