
வெகுநாள் கழித்து
ஒரு தீபாவளி
குழந்தைகளுடன்
இவ்வருடம்;
இனிமையாய் ஒரு
ஆரம்பம் !
செட்டி நாடு
கைத்தறி புடவை
பிள்ளைகளுக்கு விருப்பம்
போல்; அவருக்கு
ஏற்கனவே இருந்தது;
புதுச்சட்டை.
ஒக்காரை கிளறி
எடுத்தாய் விட்டது.
பர்ஃபி துண்டம்
போட்டாகி விட்டால் அவ்வளவே!
வெள்ளை அப்பமும்,
சலவை சட்னியும்,
வெல்ல தோசையும்,
நாளை முதன்மை பலகாரம்.
லேகியம் கிளற
மருமகள் பக்கத்தில்
மகளுடன் அரட்டை!
“ஆ” இதுவன்றோ தீபாவளி!
11-11-2023
