அழகியசிங்கர்/தீபாவளி

எப்போதும் போலில்லாமல்
இன்று
தீபாவளி என்பதால்
சீக்கிரம் எழுந்து
எண்ணெய்த்
தேய்த்துக் குளித்து விட்டு
காப்பியைக் குடித்த
பிறகு
சும்மா இருக்கிறேன்
வீட்டில்
தட்டில் வைத்த தின்பண்டங்களை
மென்று கொண்டிருக்கிறேன்
கவிதை வருமா
என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்
யார்யாருக்கோ
கவிதைகள் உதயமாகி
தொந்தரவு செய்கின்றன..

நமோ நாராயண!