நாகேந்திர பாரதி/பயந்தாங்குளி நிலா

நட்சத்திரங்கள் தடுத்தன
நிலாவை

சுடுகாட்டிலே ஆவி

காத்தெல்லாம் பிண நாத்தம்

மரத்திலே முனி

கண்மாயிலே கருவாய்

காட்டிலே கொள்ளிவாய்

சலங்கையோடு மோகினிப் பிசாசு

தெருவிலே பேய்

மலையெல்லாம் பூதம்

பயந்து போன நிலா
பூமிக்கு வரவில்லை

அமாவாசை அன்று

—————————-

One Comment on “நாகேந்திர பாரதி/பயந்தாங்குளி நிலா”

Comments are closed.