நானார்.?

வே.கல்யாணகுமார்

இலவம் பஞ்சாய் வனமெங்கும் மனம் பின்னே பறக்கின்ற

பட்டாம் பூச்சியானேன்!

எருக்கம்பூ மொட்டுகளில் வடிகின்ற பால் காம்புகளை

தொட்டு இழைந்தோடும் காற்றாகம்  மாறினேன்..

வாசமலர்த் தோட்டமெங்கும்.. ஒரு வருஷ காலமேனும்..

அத்திமரக் கிளைகளில் ஆனந்த தேன் கூடாய் நானிருந்தேன்!

எல்லாப் பிறப்புகளும் பிறந்திளைத்து இன்று யான்கல்லும்

மண்ணும் காற்றும் கலந்திருந்த ஒரு ஓடு போலானேன்!

காலமென்னும் நூல்பிடித்து ஆட்டுவிப்போன் ஆடும்

கைகளிலே ஓரு ஓட்டைப் பாத்திரமானேன்.! அவன் போட்டு

உடைக்கும் வரை..