கேள்விக்காரன்/நாங்களும் உங்களோடுதான்

விரும்பியோ
விரும்பாமலோ
அது நீங்கள் விதித்த
விதி ஆனது.

உங்கள் நீரிழிவு
உங்கள் இரத்த அழுத்தம்
உங்கள் நுரையீரல் நோய்
உங்கள் இதய நோய்
கவனம் கவலை
எங்கள் பக்கமும்
கொஞ்சம் இருக்கட்டும்
பிளீஸ்!.

பூமி இதுவரை
காணாத உஷ்ணத்தை
கடந்த பன்னிரண்டு
மாதங்களாக கண்டு
இருப்பதாகச் செய்தி.

உங்கள் சிவகாசிக் காதல்
எங்கள் உயிருக்குக் காலன்
நீங்கள் எங்களைத் தேடி வந்தால் அது
வனச் சுற்றுலா
நாங்கள் உங்களைத்
தேடி வந்தால் அது
உயிர்க்கிலி உலா.
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் சாத்திரங்கள் சடங்குகள்
ஒருபோதும் எங்கள்
உயிர் போக்கிகள்
ஆகிவிட வேண்டாம்
பிளீஸ்!!
உங்கள் பண்டிகைகள்
உங்கள் கேளிக்கைகள்
சிறக்கட்டும்
எங்களையும் கொஞ்சம்
நினைத்த வண்ணம்
பிளீஸ்!!.

11.11.23
சொல் புதிது இணைய கால கவிதை அமர்வு எண் 24.