சுரேஷ் ராஜகோபால்/வினைதானே விதைக்கிறாய்

சொல் புதிது இணைய கால கவியரங்கம் எண் 24, தேதி 11 11 2023, சனிக் கிழமை நேரம் மாலை 06.20, தாம்பரத்திலிருந்து எனது கவிதையைப் படிக்கிறேன்.

அவன் தோட்டத்தில்
விதை விதைத்தான்
செடி வந்தது
பெரிய மரமானது
மலர் மலர்ந்தது
காய் காய்த்தது
கனி தந்தது
மறுபடி அதில்
விதை வந்தது.

ஆனால்
மனிதா நீயோ
வினைதானே விதைக்கிறாய்
பிறகு
என்ன எதிர்பார்க்கிறாய்?
நிம்மதியே நித்திய வாழ்வில்