நீ
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?
உன் உதடுகள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
சொந்தமானது என
மறந்தது ஏன்?
தீ பிழம்பாய் சுட்டு எரிக்காமல்
அமிழ்தாய் இனிக்கட்டுமே உனது சொல்!
இனிய நாவே
கனிவான சொல்
உதிர்த்து
நீடூழி வாழ்!
