கணக்குகளும் விடைகளும்/ மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                                            ஷைலஜா கதைகள்

                                

     கதைச் சுருக்கம்;

அரங்கா கேட்டரிங் சர்வீசில்  நடத்தும் சாரங்கனிடம் சமையல் வேலை செய்கிறான் கோபி, அவன் மனைவி மீனா.  வீட்டிலேயே பட்சணங்கள் செய்து கடைகளில் சென்று தருவது அவள் வேலை.ஒரே மகன் ஹரி. பள்ளிப்படிப்பு முடிந்து இஞ்ஜினியரிங் அதாவது பொறியியல் படிக்க காத்திருக்கிறான் மிடில் லோயர் கிளாஸ் மக்களுக்கு பற்றாக்குறை தீராது அடித்தட்டு மக்கள் கணக்கிட்டு வாழ்வதில்லை. அதனால் சமாளித்து விடுவார்கள் , மேல்தட்டு மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை பணபலம் உள்ளதால். என்று சலித்துக் கொள்கிறான்.

அன்று அடர்நீல நிற பேண்ட்டும், வெளிர் நீலநிற சட்டையும் அணிந்து புறப்படுகிறான். இப்படித் துவங்குகிறது கதை. 

அரங்கா கேட்டரிங் .என பெரிதாக எழுதி கோபி என அவன் போட்டோவுடன்  கூடிய பேட்ஜ்  கோர்க்கப் பட்ட சாடீன் ரிப்பனை கழுத்தில் போட்டுக் கொள்கிறான். அப்போது மீனா இது மட்டும் இல்லையென்றால் நீங்கள் ஆபீசில் வேலை செய்பவர் போலவே  எல்லோருக்கும் தெரிவீர்கள். என்கிறாள். 

வங்கியில் கல்விக் கடன் கேட்பது, உதவும் தொண்டு அமைப்புகளை அணுகுவது எனப் பலவாறாக யோசிக்கின்றனர். இறுதியில் ஒரு வாரத்தில் செய்யும் வேலையில் புரட்ட நினைக்கிறார்கள். அன்றைய திருமணம் சாரங்கனின் ஏழை நண்பரின் மகளுக்கு என்பதால் வழக்கமான தொகையில் பாதியே சாரங்கன் தருகிறார். நாம் அன்னதானம் செய்ததாக நினைத்துக் கொள்வோம் என்கிறார்.ராஜப்பா சீறுகி றான் , ‘இந்தாளிடம் இருந்தா ஓட்டாண்டியா ஆயிடுவோம்.’

அதோடு பட்டாபி வராததால் வீட்டிற்குச் சென்று பார்த்து வந்ததில் கோபி வீட்டு வாடகைக்கு வைத்திருந்த எண்ணூரில் 400 தருகிறான் ஆட்டோவிற்கு.

களைத்து வருபவன் கண்ணில் பட்டது தன் இரையை இழுத்துச் செல்லும் சிறிய எறும்பு.

நிலைப்படிக்கும், கான்கிரீட் சுவருக்கும் இடையிலிருந்த சிறிய சந்தில் முயன்று இலாவகமாக பெரிய இறகை இழுத்து விடுகிறது.

அதன் நம்பிக்கை ஏதோ ஒன்றைச் சொல்கிறது கோபிக்கு. 

அதே சமயத்தில் மகன் ஹரி டியூஷன்  பிள்ளைகளிடம் சொல்வது கேட்கிறது. 

 எல்லோருக்கும் கஷ்டம் உண்டு. .திண்ணையிலிருந்து  விழுந்தால் இலேசான காயம்படும், மூன்றாம் மாடியிலிருந்து விழுந்தால் எலும்பு முறியும். உயிருக்கும் ஆபத்து. பணம்,பதவி செல்வம் உள்ளவர்கள் அதிகம் ஒழுக்கம் காக்க வேண்டும், மற்றவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்.இந்த உயர்ந்த எண்ணம் விரிந்து எல்லோரிடமும் அன்பு காட்ட வைக்கும்.

என்று சொல்லிவிட்டு கண்ணன் பாஞ்சாலிக்கு உதவியது சொல்லி, தன் நிலை சொல்லி,’உங்கள் பெற்றோரில் எவருக்காவது ஏழைகளின் படிப்புக்கு உதவும் எண்ணம் இருந்தால் நான் பொறியியல் படிக்க உதவுங்கள், நானும் படித்து முடித்து எதிர்காலத்தில் ஏழைப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவேன்’ என்கிறான்.

உடனே பிள்ளைகள் கண்டிப்பா சொல்றோம் அண்ணா வீட்டில்,’ நீங்க நிச்சயமா எஞ்ஜினியர்  ஆகப்போறீங்க’  என்கிறார்கள்.

கோபி இந்த நம்பிக்கை தனக்கு வரவில்லையே என நினைக்கிறான்.

எளிய நடையில்  கதை நகர்த்தப்படுகிறது.

கதைக்குள் கதை- சாரங்கன்  சொல்வது. அவருடைய தந்தை கும்பகோணத்தில் சங்கர மடத்தில் வேலை செய்தது. இவர் சிறுவனாக அன்னதானத்தில் இலைகளை எடுத்தது. பின் வளர்ந்து திருமணமாகி வேலையின்றி வறுமையில் வாடியது, அதன்பின்னர் சங்கராச்சாரியாரை காஞ்சிக்கு மாறியிருந்த சங்கரமடத்தில் சென்று வணங்கி கஷ்டத்தைச் சொன்னது. அவர் ஆசீர்வதித்து 11 ரூ தந்தது. நாளடைவில் கல்யாண வேலைகள் கிடைத்து வறுமை விடைபெற்றது,

அதன்பின்னர்,’அரங்கா கேட்டரிங் சர்வீஸ்’ ஆரம்பித்தது

.பிள்ளை வளர்ப்பு; நல்ல பண்புகளோடு, கடவுள் நம்பிக்கையுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் துன்பங்களால் துவண்டுபோக மாட்டார்கள் என்பதற்கு அடையாளமாக ஹரியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. 

சுறுசுறுப்புக்கு , உழைப்புக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது

எறும்பு. அதை இங்கே காட்சிப் பொருளாக்கி நம்பிக்கையைத் தூண்டிவிடுகிறார்.

பிள்ளையின் படிப்புக்கான கணக்கைப் பெற்றவர்கள் போட்டுப் பார்த்தும் விடையில்லை.ஆனால் மகன் எளிதாக விடையைக் கொண்டு வந்து விடுகிறான். அதனால் .

கணக்குகளும் விடைகளும்’ என்ற தலைப்பு பொருந்துகிறது.

எளிய உவமைகளோடு அருமையான கதையைத் தந்துள்ளார் ஆசிரியர். 

……………