எஸ்ஸார்சி/மனமும் உறவும்

இணையக்கால கவியரங்கம்

12/11/2023

மனித உறவுகள்
அரிய சூட்சுமம்
அதை நிர்வகித்தல்
எளிதானதல்ல
மனித உறவுகள்
கண்ணாடியால் ஆனது
கவனம் தேவை
எப்போதும்
வாய்தவறி விழும் வார்த்தை
ஆண்டாண்டு
உறவினை விழுங்கி விடும்
மன விசாலமே மனித உறவுகளின் அடிப்படை
மன விலாசம் எப்படியோ
அப்படிக்கு உறவு ஆழப்படும்.
மனம் விசாலப்படத்தான்
மார்க்கம் தெரிவதில்லை.