ஹரணி/இயல்பின் வினை..

இணையக் காலக் கவியரங்கம்.. 25
12.11.2023
6.00 மணி
000

நாளைப் பார்க்கலாம்
என்று சொல்லிவிட்டுப்
போகிறவர்களில்

ஒருவர் அன்றிரவே
இறந்து போனார்…

இன்னொருவர் அவசரச்
சிகிச்சைப் பிரிவில்…

ஒருவர் மனைவியுடன்
சண்டையில்
உறக்கத்திலிருந்து
எழவில்லை…

ஒருவர் அவசரப்
பயணத்தில்..

ஆனால் செடி நிறையப்
பூக்கள் பூத்துக் குலுங்கின
வழக்கம் போலவே..


தஞ்சாவூர்

One Comment on “ஹரணி/இயல்பின் வினை..”

Comments are closed.