வாழ்தல்/வைதேகி

25வது இணைய கால கவியரங்கம்



மதில் சுவரில் வந்தமரும்
காக்கைக்குப் பிடிசோறு
துளிர்த்திருக்கும் தொட்டிச் செடிக்கு
ஒரு காலை வணக்கம்
நீண்டநாள் கழித்து வந்த
கீரைக்காரப் பாட்டியிடம் நலம் விசாரிப்பு
மாடிவீட்டு மழலைக்கு
கன்னத்து இதழ் ஒற்றல்
பேருந்தில் ஏற தடுமாறும் பெரியவருக்கு
இதமான கை பற்றல் என்று
வாழ்ந்துதான் பார்ப்போமே!
வாழ்தல் என்றால்…
பெரிதாக வேறென்ன?

.

2 Comments on “வாழ்தல்/வைதேகி”

Comments are closed.