
சுரேஷ் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்தான். அது ஒரு சிறிய கிராமம். சுரேஷின் அம்மா அவனுக்கு கிராமத்தை காட்டுவதற்காகவே அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் இருப்பதற்காக அழைத்து வந்தாள்.
சுரேஷிற்கு பயங்கர குஷி. அவன் அந்த பெரிய தாழ்வாரம், கொல்லை எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான்.
பின் கட்டுக்கு போனால், அங்கு அவன் அத்தை கிணற்றில்
வாளியைக் கட்டி நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு பெரிய அதிசயமாக இருந்தது. இதுவரை இப்படி ஒன்றை அவன் பார்த்ததே இல்லை. ” இது என்ன அத்தை?” என்று கேட்டான். அவன் அத்தையும் சிரித்துக் கொண்டே இது தான் கிணறு. இதிலிருந்து எப்போ வேண்டுமானாலும் தண்ணீர் எடுக்கலாம் என்றாள்.
“ஹை, சூப்பர் மேஜிக்” என்று குதித்தான். நான் குளிக்கிறேன் என்று அடம் பிடிக்கவே, அத்தையும் வாளி நிறைய தண்ணீர் இறைத்து அவன் தலையில் ஊற்றினாள் . சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை அவனுக்கு. உடனே அம்மாவிடம் சொல்லி இதோடு செல்ஃபி எடுத்து வாட்ஸ்
அப்பில் சிங்கப்பூரில் உள்ள தன் நண்பர்களுக்கு அனுப்ப முடிவு செய்தான் சுரேஷ்.
13/11/2023
