கிருஷ்ணன்/கிணற்றடிக் குளியல்

தாத்தாவின் கிராமத்துக்கு ஒரு விழாப் பயணம்.
மகளுக்கு மனதில் பொங்கும் மகிழ்ச்சி;
பேரனுக்குப் புதுப் புது அனுபவங்கள்.
திறந்தால் நீர் வரும் குளியலறை அரைகுறைக் குளியல் பற்றி அம்மாவின் அங்கலாய்ப்பு மாறி கிணற்றில் இறைத்துக் குளியல்.
இரவு உடல் கதகதப்பு;
“ஒத்துவராது எல்லாம் ஏன் பழக்கறே?” அப்பாவின் சீறல்.
அம்மாவின் கண்ணீரையும் தாண்டி மனதில் மகிழ்ச்சி.
நல்லவை கூட ஒத்துக் கொள்ளாத ந(ர)கர வாழ்க்கை!
” அம்மா இங்கே வந்து பதினைந்து நாளாவது தங்கனும்.. எல்லாம் பழகிடும்”
கண்ணீரைத் துடைத்தான் மகன்.