சுரேஷ் ராஜகோபால்/கபடி – கபடி

குழந்தைகள் தினம் கவிதை

சிறுவர்கள் கபடி விளையாட்டு
வேடிக்கை பார்க்கச் சென்றேன் வேட்டியோடு
வயதில் எழுபதின் எல்லை
பேரன் விளையாட்டை
ரசிக்கவே போனேன்.

அணி பிரித்தார்கள்
ஒரு அணிக்கு
ஒரு ஆள் குறைந்தது
என்னையும் விளையாட்டில்
சேரச் சொன்னார்கள்.

குழந்தை விளையாட்டுதானே
வீம்பெதற்கு, அணி சேர்ந்தேன்
“கபடி கபடி” என்று மூச்சிரைத்தேன்
அவுட் ஆனேன்
அடுத்த ஆட்டத்துக்குக்
காத்து இருந்தேன்.