கலைச்செல்வி/உதறுவது சில போது எதுவுமில்லை


சட்டென்று ஒரு உறவிலிருந்து வெளியே வந்து விடுகிறேன்
அதுவும் முழுமையாக
முழுமை என்பது எப்போதும்
பெரிய நிம்மதி

நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.
நானா அப்படிச் செய்தேன் என்றும் தெரியவில்லை

உதறுகிற அளவிற்கு பலவீனமான உறவென்பது வேறொன்றுமில்லை
கொஞ்சம் போலி
நிறையப் பொய்
அவ்வளவுதான்.


15.11.2023