எஸ்ஸார்சி/நம்பிக்கை

இணையக்கால கவியரங்கம்
எண் 27

எஸ்ஸார்சி வாசித்த கவிதை

உதிக்கும் கதிரவனும்
பொழியும் மழையும்
சிரிக்கும் மழலையும்
பூக்கும் மலர்க்கொடியும்
பசுமைப்புல்வெளியும்
நம்பிக்கையின் ஊற்றுக்கண்
மானுட வாழ்க்கையில்
நம்பிக்கை தரும் கவிதைகளை
எனக்கும் எழுதிட ஆசைதான்
நம்பிக்கைத் தருவிக்கும்
சமாச்சாரங்கள் கண்முன்னே
நிகழ்ந்தால் மகிழ்வேன்
எழுதுவேன் கவிதைகளை
சமூக நடப்புக்கள் எல்லாவற்றுக்கும்
பின்னே வோர்
அரசியல் ஒளிந்துகொண்டு நகைப்பதைக் காண்கிறேனே
காக்காய்க்குச்சோறுபோடுவதிலிருந்து
கப்பல் கட்டுவது வரை
எல்லாவற்றுக்குள்ளும்
கள்ளம் ஒன்று கண் சிமிட்டுகிறதே
எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல்
எந்நேரமும் உழைக்கும்
விவசாயி தொழிலாளி
நேர்மையின் மீதுதான் தோழா
இப்பூவுலகம் சுழல்கிறது.