
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
செவ்வாய் கிழமை
மாலை மணி6.15
இணைய கால கவியரங்கம்
நெளு நெளு
சேலையின் மேல்,
வெளிர் நீல நீண்ட சட்டை.
இடது பக்க பையில்,
திறன் செல் பேசி
எட்டிப்பார்க்க;
வலது பக்க பையில்
வீட்டு சாவி;
சரியாக மணி ஒன்பது
சூடான வடையிலும்,
தேநீரிலும் “சட்”
என, குறும்பசி
ஆற்றி;
பதினொன்று
மணிக்கெல்லாம்,
பணி முடித்து
முகம் கழுவி,
சீருடை மாற்றி,
முகம் திருத்தி ,
அண்ணே! வண்டி
எடுத்துக்கிடுதேன்;
என சைக்கிளை
வேகமாக மிதித்து;
வங்கியில் அரசு
அம்மாதம் அளித்த
சம்பளப் பணத்தை,
சுளுவாக எடுத்து
தன் தாயின்
கணக்குக்கு மாற்றும்
பொன்னியின் முகத்தில்
பொலியும் பெருமை…
அதுவே பெண்ணின் பெருமை.
பார்க்கும் என்
தலைக்கும் ஏறியது;
பெருமை.
14-11-2023
