சிறகா/என் சமையல் உலகம்

சொல் புதிது 27 வது இணைய கால கவியரங்கம்
வாசிப்பது.

மெல்லிய கோடாய் உருகி வழிந்து உறைந்த மெழுகில்

நின்றது குட்டிக் குரங்கு ஒன்று நீண்டு தொங்கிய வாலுடன்

இரவும் நட்சத்திரங்களும் கடுகுபாட்டிலில் அடைந்து கிடக்க

திமில் முதுகும் நீண்ட மோவா யும் கொண்டு

இஞ்சியில் அமர்ந்து இருக்கும் ஒட்டகம்

கச்சிதமான இடுப்புடன் கால்மேல் கால் போட்டபடி

நீண்ட அழகிய கால்களால் நின்ற காரட்

கோமாளியின் தொப்பியை தலையில் சுமந்த குண்டு கத்திரிக்காய்

தாத்தாவின் வளைந்த கைப்பிடிகுடை இங்கே பச்சைமிளகாய்

கரடு முரடான கறுப்பு பாறாங்கல் கீழே சேனைக் கிழங்கு

தஞ்சாவூர் பொம்மை இப்போது சாய்ந்தாடும் உருளைக்கிழங்கு

கருவிழிகள் உருட்டி உற்று பார்க்கும் மிளகும் திராட்சைபழமும்

சிறிய பால் பற்கள் தெரிய சிரிக்கும் குழந்தையின் வாய் போல்

லேசாக வெடித்திருக்கும் வெள்ளரிபழம்

குளித்து உலரும் கூந்தல் போல் சொய்கீரை கட்டு

தங்கமணி களை கோர்த்து வைத்திருக்கும் நெற்பயிர்கள்

குறுந்த்தாடியை மட்டும் வைத்துக் கொண்டு

இறுகிய ஓட்டுக்குள் தளும் பும் நீருடன் தேங்காய்

மணலில் தூள் தூளாக உடைந்து சிதறிய சிப்பிகள் உப்புக்குவியலில்

கடல் அலை போல் பொங்கி வந்த வெண்மே கத்திரள் என

அடுப்பின் மீது படியும் பால் நுரை

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக

எண்ணெயில் பொரியும் கடுகும் பெருங்காயம்

கருவேப்பிலை உடன் இணைந்து இசைக்கும்

அற்புதமான ஜூகல்பந்தி இசை ராகங்கள்

உன் பசியைத் தூண்டும் மணம்

எப்போதும் சமையலறை

இல்.

One Comment on “சிறகா/என் சமையல் உலகம்”

Comments are closed.