எஸ் வி வேணுகோபாலன்/பொங்கிடும் கடலே புயலே!

புன்னகை பூக்கும் உள்ளம்
தன்னகத்தில்லை கள்ளம்
செங்கொடி இயக்க வாழ்க்கை
சங்கொலி எழுச்சிப் பேச்சு
அரசியல் உறுதிப் பாடு
வரிசையாய் தியாகச் சுவடு
இலக்கியம் தோய்ந்த சிந்தை
களப்பணி ஓங்கும் விந்தை
இசையிலே விளையாட்டினிலே
விசையுறு வேட்கை வேட்கை
அன்பினார் அறத்தார் தூய
பண்பினார் அடக்கம் கொண்டார்
எங்குதான் காண்போம் தோழா
பொங்கிடும் கடலே புயலே!

(இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற சீனியர் மேனேஜர் தேவநாதன் எனும் ஓவியர் தேவா அவர்கள் சற்று முன் வரைந்து அனுப்பிய ஓவியம் பார்த்த வேகத்தில் எழுதிய எளிய கவிதை இது)