மழை பெய்து கொண்டிருந்தது

அழகியசிங்கர்

மழை பெய்து கொண்டிருந்தது
பார்த்துக் கொண்டிருந்தேன்

தண்ணீர் தெருவில்
போய்க் கொண்டிருந்தது.

பார்த்துக் கொண்டிருந்தேன்.

எதிர் வீட்டில் தண்ணீர்
வீட்டிற்குள் போய்
ரகளை செய்து
கொண்டிருந்தது

பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒன்றும் செய்யமுடியாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்

ஆமாம்
என் கதை வந்திருந்த
தினமணி கதிரை கடைக்குப் போய் வாங்க
எதிரில் நின்று கொண்டிருந்த சிறுமிகளைத்தான்

பார்த்துக் கொண்டிருந்தேன்

One Comment on “மழை பெய்து கொண்டிருந்தது”

Comments are closed.