இணையக்கால கவியரங்கம்
15/11/2023

கணக்குப் போட்டு
விளம்பரப்படுத்திக்
காய் நகர்த்துபவர்கள்
மேடையில் தொடர்ந்து
பிரகாசிக்கிறார்கள்
நொடிப்போதும்
தந்நலமற்று வாழ்ந்தவர்
வாழ்க்கைச் சமூகத்தால்
கவனிக்கப்படுகிறதா
என்றால் இல்லை
சமூகம் அவரைக்
கணக்கில் கொள்கிறதா
அதுபற்றி அவரும் கவலைப்பட்டால்தானே
எல்லோர்க் கணக்கும் நேராக வேண்டும் என்று
ஆசைப்படலாம்
ஆசைப்படுவது நிகழ்த்தப்பட வேண்டுமென்று
வரலாற்றுக்குக் கட்டாயமில்லை
நேர் செய்யப்படாத கணக்குகள் ஏராளமுண்டு
எப்போதும் வரலாற்றில்.

சிந்திக்க வைக்கும் சிந்தனைகள்!