
கொளுத்தி
நடு வீதியில் எறியப்பட்ட நீண்ட வெடிச்சரம் இன்னும் வெடிக்கவில்லை ஆனால் என் மூளைக்குள்
அது வெடித்து பல வினாடி
ஆகிறது.
ஒரு கவிதையை எழுதி முடிக்கும் முன்பே
எழுதி முடித்து விடுகிறேன்
கிடைக்கும் முன்பே ஒருத்தியின்
காதல் எனக்குக் கிடைத்திருக்கிறது இதோ –
வெடிச்சரம் வெடிக்கிறது
‘காத்து” நின்றவர்கள் களிப்போடு சிரிக்கிறார்கள்
அடுத்த வெடி வெடிக்கிறது
எனக்குள்
(28 வது இணைய கவி அரங்கத்தில் 14.12.2023 அன்று வாசித்த கவிதை)
