சிறகா/மகிழம்பூ வின் வாசம்

சொல் புதிது 28 வது இணைய கால கவியரங்கம்
வாசிப்பது சிறகா .

இப்போது

அந்த இடத்தை கடக்கும் போது

அதீத உணர்வுடன் இருக்கிறது

மகிழம்பூ வின் வாசம்

யாரும் வழியில் நுகரவில்லை

பன் நெடுங் காலம் முன்பு

அந்த இடத்தில் தான் பூக்கள்

உதிர்ந்து கொண்டிருந்தன

தூரத்து சிம்னி வெளிச்சத்தில்

இலைகள் அசைந்து

கருத்த இருளை உரசிக் கொண்டிருந்தன

காற்று அள்ளி சென்றது எதை.