ஸ்ரீ ரமண விருந்து/சிவ.தீனநாதன்

  1. அவளுக்காவது குணமாகட்டும்

(‘நெல்லூரிலிருந்து வந்த மருந்துகளை இவளுக்குக் கொடுத்தால் சரியாகலாம்’ என்றார்.)

1949-இல் ஆசிரம கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பகவானின் அத்தை பிள்ளை ராமஸ்வாமி ஐயரின் மனைவி அம்மாளு அம்மாள் பகவானதும் கைக்கு
ஆபரேஷன் ஆனபிறகும் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார்.
இந்த அம்மையார் ஒருநாள் பகவானை நமஸ்கரித்துத் தன் உறவினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் தான் திரும்பிப் போக விரும்புவதாகக் கூறினார்.
அவ்வம்மையாரின் கழுத்திற்கு மேல்பக்கம் எலுமிச்சம்பழ அளவு கட்டி இருப்பதைப் பகவான் பார்த்தார்.
‘சரி நீ போய் வா’ என்று கூறிய பகவான்; ‘அது சரி; உன் கழுத்தின் மேல் இருக்கும் கட்டி என்னது? எப்படி வந்தது?’ என்று கேட்டார்.
அதற்கு அவ்வம்மையார், ‘அது என்னவென்று தெரியவில்லை. சிறியதாக இருந்தது. நாளுக்கு நாள்அது வளர்ந்து கொண்டே போகிறது’ என்றார்.
‘அதனால் உனக்கு வலி ஒன்றும் இல்லையே?’ என்று கேட்டார் பகவான்.
‘அதை அழுத்தினால் வலி தெரிகிறது. இல்லாவிட்டால் வலி இல்லை’, என்றார் அம்மாளு அம்மாள்.
அருகில் உள்ளவர்களிடம் பகவான்,
‘இவளுடைய கட்டியை பார்த்தீர்களா? எப்படி வளர்ந்திருக்கிறது! நம் கைக்கு வந்த கட்டியும் இது போன்றது தான். நெல்லூரிலிருந்து வந்த மருந்துகளை இவளுக்குக் கொடுத்தால் சரியாகலாம்’, என்றார்.
அடியார்களில் ஒருவர் ‘அதைக் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டதும், பகவான், ‘அதைக் கொண்டு வா; அவளுக்காவது குணமாகட்டும்; எனக்குத் தான் ஆபரேஷன் செய்திருக்கிறார்களே!’ என்றார்.
ஓர் அடியார் சென்று அந்த ஆயுர்வேத மருந்து டப்பியைக் கொண்டு வந்து பகவானிடம் கொடுத்தார். அச்சமயம் ஸ்ரீமதி. அம்மாளு அம்மாளின் மகன் விஸ்வநாத பிரம்மச்சாரியே அங்கு வந்தார்.
பகவான் அவரைஅழைத்து, ‘இதோ, இதை உன் அம்மாவிடம் கொடு, இது நமக்கு இனி தேவை யில்லை’ என்று சொல்லி அவரிடம் டப்பியைத்
தந்தார்.
அதை அவர் மகாபிரசாதமாக ஏற்றுக்கொண்டார்.
இதன்பிறகு ஸ்ரீமதி. அம்மாளு அம்மாளுக்கு அவர் கழுத்தில் இருந்த கட்டி இம்மருந்தினால் கரைந்து அவர் குணமடைந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘அவளுக்காவது குணமாகட்டும்’ என்று பகவான் கூறிய வாக்கு கூறினார்.
அடியார்களின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.
பகவான் கைக்கு ஏற்பட்ட புற்றுநோய் குணமாகப் போவதில்லை என்பதை பகவானே சூசகமாக அறிவித்துவிட்டார்’ என்றே அடியார்கள் நினைத்து, நினைத்து வெதும்பிப் போனார்கள். முடிவில் பகவான் திருவாயிலிருந்து வந்த இச்சொற்களே உண்மையாயின.
نوال