எஸ்ஸார்சி/நடப்பு

இணையக் கால கவியரங்கம்/
30

18/11/23

எஸ்ஸார்சி வாசித்த கவிதனன

தேசத்தின் வளர்ச்சிக்கு
சாலை அமைக்கிறார்கள்
உத்ராகண்டி ல்
சுரங்கப்பாதை அமைப்பு
இடிபாட்டுக்குள்
அய்ம்பது தொழிலாளர்கள்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்
இந்நேரம் என்ன
ஆனார்களோ
முன்னம் இங்கே
அணை ஒன்று கட்டினார்கள்
நூற்றுக்கணக்கில்
மக்கள் செத்துப்போனார்கள்ள
இமயமலையின்
நில ஆய்வு அரைகுறையாய்
எந்த திட்டமும் அவசரகதியில்
நிறைவேற்றம்
சூழலியல் பின்தள்ளப்பட்டு.
உலகக்கோப்பை கிரிக்கெட்
ஆமதாபாத்தில் கொண்டாட்டம்
எப்படித்தான் மகிழ்ச்சி தருமோ.