பி. ஆர்.கிரிஜா/நித்திரை

ஆனந்தமான ஒரு
சொல் நித்திரை
நித்திரையில் சிலர்
கும்பகர்ணன் உறவுகள்
நித்திரை பலரின் பகற்கனவு;
செல்வந்தனுக்கும்
நித்திரையில்லை,
வறியவனுக்கும்
நித்திரையில்லை!
முன்னவன்
பயத்தினால்,
பின்னவன் பசியினால் !
பேராசையின் உச்சம்
நித்திரை தொலைந்த அவலம் !
நித்திரை தேடி
மருத்துவர் நாடும் நிலை !
என்று நித்திரை
கைகூடும் ?
மனம் மடங்கி அடங்கினால்
நித்திரை அனைவரின்
கைவசம் !


19/11/2023

One Comment on “பி. ஆர்.கிரிஜா/நித்திரை”

Comments are closed.