
சொல் புதிது, இணைய கால, 31வது கவி அரங்கம்,தேதி 19 11 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05 05, “வேண்டாமே வீராப்பு” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால்.
நமக்கென்று ஒரு வழி
நாமெல்லாம் ஒரு குடி
பலமில்லாத போது
ஒடிந்து விடுவதை விட
வளைந்து வாழ்வதே
சில நேரம் நன்று.
காலூன்றி பலம் பெற்று
நிமிர்ந்து விடலாமே
அதனை மறந்து வீராப்பு
கொண்டு வீணாக வேண்டாமே.
நமக்கென்று ஒரு வழி
நாமெல்லாம் ஒரு குடி.
