ஷைலஜா/பெருசு


கவிதை எழுதி வாசித்தவர் ஷைலஜா.

தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது
பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணிப்
போர்த்துகிடக்கிறது உடல்முழுதும்
கனவில்மட்டுமே அனுபவித்த சந்தனமும் சவ்வாதும்
கையிலும் காலிலும் மணக்கிறது
புத்தகம்படிக்க விளக்குதந்ததில்லை
புதுக்குத்துவிளக்கு இன்று பூரித்து எரிகிறது
அதட்டி விரட்டி ஒடுக்கிய குரல்கள் எல்லாம்
அழுகை பொங்க அலறிட
அமைதியாய் கண்மூடி
அப்படியே கிடக்கிறது
வீட்டு,’பெருசு’ என்று நேற்றுவரை
அழைக்கப்பட்ட
இன்றைய சவம்.

One Comment on “ஷைலஜா/பெருசு”

Comments are closed.