
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி 5.15
கவிதையின் தலைப்பு
வேண்டி நின்றேன் வேலை
குணமது பெருக்கி;
மனமதை அடக்கி,,
செயலது துலங்க,
மலமது விலக,
கரணங்கள் கரைய,
துயரது தீர,
பயமது சுருங்க,
அறிவொளி ஓங்க,
உயிரொளி மிளர,
தவமது உன்னி,
சிவமதில் உறைய,
சிவந்தி நாதன்
செம்மையாய்,
சிந்தையில் சிறந்திட;
அருள்வாய் அரசிலை வேலே!
19-11-2023
