
சொல் புதிது, இணைய கால, 32வது கவி அரங்கம், தேதி 20 11 2023 கிழமை திங்கள், நேரம் மாலை 05 05, “கற்பது பலபல” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால்
கற்பது பலபல
தினம் தினம்
புதிது புதிதாக
பல கற்கலாம்
எத்தனை கற்றாலும்
எப்படிக் கற்றாலும்,
உலகிலுள்ள அனைத்தையும்
கற்பது இயலாது
ஆனால்… ஆனால்…
கற்பதை நிறுத்திவிட்டால்
இறப்புக்கு ஒப்பாகும்.
தினம் தினம்
புதிது புதிதாக
கற்றுக் கொண்டே இருக்கலாம்
கற்க ஏராளம் இருக்கு
வரும் நாளில்
கற்பது ஒன்றே
குறிக்கோளாகக் கொள்வோமே.
நமது மூளையில்
சேமித்து வைக்க
ஏராளமாக இடமும் இருக்கே
தினம் தினம்
புதிது புதிதாகப்
பல கற்கலாம் தானே.
20 11 2023, 05.05 PM
