
இணைய காலக் கவியரங்கம்
‘
களிம்பு டம்ளரில்
கருப்பு காப்பி
வாயில் பேஸ்ட்டோடு
பாத்ரூம் வரிசை
ரூமுக்குள் கொடி கட்டி
காய விட்ட குத்தாலம்
பக்கத்து ரூமில்
வாசம் செய்யும் சிகரெட்டு
சின்ன நோட்டோடு
கல்லூரிப் பெஞ்சு
சிரிக்கும் பெண்ணோடு
சேர்ந்து சிரிப்பு
கட்டடித்து நின்ற
சினிமா கியூ
சாயந்திரம் சாப்பிட்ட
முறுகல் தோசை
சனிக்கிழமை போன
இரண்டாம் ஷோ
கொத்து புரோட்டாவில்
குத்திய முட்டை ஓடு
பாலத்தில் நடக்கும் போது
பாடி வந்த டி எம் எஸ்
படுக்கை விரித்தவுடன்
ஓடி வந்த தூக்கம்
ஒயினும் பீரும்
ஊத்திக் கொடுத்தபடி
‘கல்லா’வில் இருக்கையிலே
கல்லூரி நினைப்பு வரும்
————————
