சசிகலா விஸ்வநாதன்/விலகு

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
திங்கள் கிழமை
மாலை மணி 5-15
இணைய கால கவியரங்கம்.

கவிதையின் தலைப்பு.

விலகு- நட்பிடம் இருந்து விலகு

நல்லோர் என
நினைத்தே
நட்புடன் பழக;
அவர்,நல்லார் எனினும்;
பொல்லா வார்த்தைகளால்
கூரிக் கிழிக்க;
வலிக்காமல் இராதே!
கிண்டல் வார்த்தை
சொல்ல, மனம்
சுருங்காமல் இருக்குமா?
அவரிடம் உரைக்க,
என் மனம் தடுக்கிறது;
அவர் மனம் நோகுமோ;
என்ற நினைப்பு ஓட;
இதற்கு என்னதான்
தீர்வு; அவரிடமிருந்து
சற்றே விலகுவது தவிர்த்து? அன்னாரையும் நோகாமல்;
என் மனமும் காயாமல்…


20-11-2023