ஆர் வத்ஸலா/வலி

19/11/23 அன்று நடந்த 31 ஆம் இணைய கால கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை:

அலுத்து தான் போய் விட்டது
எனக்கு
ஆண்டுகள் ஆகியும்
தினமும்
ஞாபகக் குப்பையை கிளறி
என் மனம்
அவன் தொடர்பான
ஏதாவது ஒரு பழைய சோக
சம்பவத்தை நினைவு கூறுவது

என் செய்வேன்?
என்னால் அதை தடுக்க முடியவில்லையே!

இன்றும் அப்படித்தான் பல் ஒன்று சற்று வலித்ததும்
நினைவுக்கு வந்து விட்டது
இன்னொரு குப்பை
சம்பவம்

அவனுடன் வாழ்ந்த(!) நாட்களில் ஒரு முறை
பல் வலி பொறுக்க முடியாமல்
நான் அழுத சப்தம் கேட்டு
பக்கத்து வீட்டு பாட்டி
வந்து விசாரிக்கவே
வேறு வழியின்றி
அழைத்துச் சென்றான்
அதிக கட்டணம் வாங்காத
பல் மருத்துவரிடம்

சிகிச்சைக்குப் பிறகு
வலி போய் விட்டது

ஆனால்
மறுநாள்
காலையில் போன அவன் வழக்கம் போல்
நள்ளிரவு திரும்பி
அழைப்பு மணியை
அலற விட்டதும்
சுரீரென திரும்பியது
பல் வலி

அதன் பிறகு
ஒவ்வொரு வீடு திரும்பல் போதும்

One Comment on “ஆர் வத்ஸலா/வலி”

Comments are closed.