எஸ்ஸார்சி/சூட்சுமம்

இணையக்கால கவியரங்கம்
19/11/2023 எண் 31

சின்ன வயதில்
பேருந்துப் பயணம்
எனக்குப் பிடித்திருந்து
காரணம் இதுதான்
என் அப்பா என்னையும்
என் அம்மா தம்பியையும்
தூக்கித் தூக்கி
வைத்துக்கொள்வார்கள்
ரொம்ப நாளாக
விஷயம் புரியவில்லை
கண்டக்டருக்குச் சேதி
சொல்ல ஏற்பாடாம்
தம்பி சின்னவன் ‌
டிக்கட் இல்லை
எனக்கு ஒரு அரை டிக்கட்
கண்டக்டர் போடத்தான்
இந்த தூக்கல் கொஞ்சல்
ஏற்பாடு அத்தனையும்
கொஞ்ச நாளாகித்தான்
உரைத்தது சூட்சுமம் எனக்கு.

One Comment on “எஸ்ஸார்சி/சூட்சுமம்”

Comments are closed.