இவள் என்ன செய்ய வேண்டும் ?/சசிகலா விஸ்வநாதன்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5-15


கவிதையின் தலைப்பு
இவள் என்ன செய்ய வேண்டும் ?
பிறந்த வீட்டின் செல்ல மகள்;
சீரும் சிறப்பபுமான
திருமணம்.
கடிமணம் புரிந்து
புக்ககம் வந்தாள்.
முதுநிலை பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில்
கணவருக்கு நிகரான ஊதியம்;
ஆயினும்
காரணமற்ற வெறுப்பு வலையில்
சிக்கி அவதியுற…
பெற்றோர் மனம்
கழிவிரக்க சுழலில் சுருள,
தன் பக்கம் நியாயம்
தானே எடுத்துப் பேச;
சம்பாதிக்கும் திமிர்;
கர்வம் ;அடங்காபிடாரி…
இன்னும் பல பட்டங்கள்.
இவ்வளவு இருந்தும்,
கண்டும் காணாமல்,
நடுநிலை கொள்கையில்
“நச்” என அமர்ந்து,
இல்லத்தின் நல்ல பையன்
எனும் பெயரை உறுதிப்படுத்தும்;
ஆண்மகன் பக்கம்
இருக்கும் நியாயம்தான் என்ன?
இவன் வன்கொடுமை ஏதும் புரியவில்லை;
சீர்வரிசை தொல்லை இல்லை;
தனிமையில் தயவும் அன்பும்.
இது பெண்ணிற்கு நிகழும் வன்முறையில்லையா?
தனியே இல்லம் திரும்ப
அஞ்சி; தினம் தினம்
அரசினர் தோட்ட மெட்ரோ நிலையத்தில்
அவனுக்காக காத்திருக்கும்;
இவள் என்ன செய்ய வேண்டும்;
எண்ணி சொல்லுங்கள்; உலகோரே!


21-11-2023