
சொல் புதிது, இணைய கால, 36வது கவி அரங்கம், தேதி 24 11 2023 கிழமை வெள்ளி, நேரம் மாலை 05.25, “பேசும் பேனா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
பேனா பேசுமா?
பேசினால் என்ன பேசும்?
எது வேண்டுமானாலும் பேசும்!
பேசும் பேனா
பேசியது கவிதையா இல்லை
கவிதையில் குறையா?
தான் வடித்த அடிகளைத்
தானே திருத்த முடியாதே
அதற்கு வருத்தம்தான் .
கவிஞன் கைக்குள் அடங்கி
அடிமைப்பட்ட நினைவுகளை
அருவியாய் மழையாய் தெளித்தன.
24 11 2023
மாலை 05.25
