
சொல் புதிதில் இணைய கால கவியரங்கம் .
வாசிப்பது சிறகா .
அடர்ந்த வனத்தின் இருளை ஊடுருவும்
நிலவொளியில்
விழுதுகள் ஊஞ்சலாடும் மரத்தினடியில்
அமர்ந்து
கையில் இருந்த அகப்பையால்
முடிவில்லாத வெளியை
மொண்டு
குவிந்திருக்கும் நெருப்பு துண்டங்களின்
மேல் வைக்கப்பட்டிருக்கும்
சமமான பரப்புக் கொண்ட சதுரமான
ஒற்றைக் கல்லின் மேல் வட்ட வடிவத்தில் ஊற்றி
பொன்னிறத்தில் சுட்டெடுத்து
பஞ்ச பூதங்களுக்கு ஓய்வில்லா து
பறிமாறிக் கொண்டிருக்கிறாள்
புலன்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட அவள்.

மிக மிக அருமை. வாழ்ததுகள்!👏