
இணைய காலக் கவியரங்கம்
இடறி விட்ட கல் உதைத்து
கோபத்தில் கத்தியதால்
காலில் கட்டு
காபிக்கு லேட்டென்று
பியூனைக் கத்தியதால்
காத்திருப்பு கடையில்
குழம்பில் உப்பில்லையென்று
மனைவியைக் கத்தியதால்
ஹோட்டலில் சாப்பாடு
வரதட்சணை பத்தாதென்று
மாமனாரைக் கத்தியதால்
கோர்ட்டில் வழக்கு
கடன் தரவில்லையென்று
நண்பனைக் கத்தியதால்
நண்பன் நஷ்டம்
ஐந்து மணிக்குள் திரும்பென்று
மகளைக் கத்தியதால்
ஓடி விட்ட மகள்
மார்க் குறைவென்று
மகனைக் கத்தியதால்
போதையில் மகன்
கிழட்டுக் கூட்டமென்று
பெற்றோரைக் கத்தியதால்
பெற்றோரின் சாவு
பாக்கி யாரும் இல்லாமல்
பழக்கத்தில் கத்துவதால்
பைத்தியமென்ற பட்டம்
——————————
