வைதேகி/மதலைகள்

36வது இணையகாலக் கவியரங்கம்


.


வண்ணங்கள் வேறு
வடிவங்கள் வேறு
விதம் விதமாய் மதலைகள்
வசதிக்கேற்ப வாழ்க்கைக்கேற்ப
இல்லந்தோறும் மதலைகள்
பாட்டனும் பூட்டனும்
பார்த்துக் கட்டிய மதலைகள்
முற்றமிருந்த வீடெல்லாம்
மழலைகள் சுற்றியாடிய மதலைகள்
விழாக்கால நேரங்களில்
தோரணம் தொங்கும் மதலைகள்
துன்பமான காலங்களில்
சாய்ந்தமரும் மதலைகள்
கன்னியர்கள் கைபிடித்து
கனாக்கண்ட. மதலைகள்
கைபேசி இல்லாமல்
கவிதை பேசிய மதலைகள்
வாழ்ந்தவர் வென்று விட்டார்
வரலாற்றில் நின்று விட்டார்
மதலைகள் பொருள் தேடி
அகராதி புரட்டுவோரே
பார்த்தால் நில்லுங்கள்
பரிதவித்துக் கொள்ளுங்கள்

.

One Comment on “வைதேகி/மதலைகள்”

Comments are closed.