சசிகலா விஸ்வநாதன்/பாண்டியாட்டம்

இனிய மாலை வணக்கம்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
வெள்ளிக்கிழமை
மாலை மணி 5.45
கவிதையின் தலைப்பு
பாண்டியாட்டம்
பாண்டி ஆடும்
சிறு பெண்
பாட்டி! வெளாட
வாரீங்களா?

நொண்டி அடித்து
எழுபது வருடம்
ஆகிவிட்டதே..‌
யோசித்தேன்.

வாங்க; பாட்டி!
உந்தி சொல்லவும்
தலைப்பை சொருகி
களத்தில் நான்.

கூட இரண்டு
சிறுமியர் வரவும்,
சாட்பூட் போட்டதில்,
நானே முதலில்
சில்லு போட்டேன்.

பாட்டி! நீங்க
பாப்பா நொண்டி
போட்டா போதும்
என்றாள் குட்டி!

இரண்டு ஆட்டம்
போட்டதில் எனக்கு
பாப்பா நொண்டி
“கால் வசமானது”

நானும் சிறு
பெண்ணாய்
மாறி வீடு
கூடசெயித்தேன்.

அடுத்தவாரம் ஏரோப்ளேன்
பாண்டி சொல்லித்
தருவதாக கையடித்து
போயிருக்கும் சிறுமியை

எதிர் பார்த்து
நான் திண்ணையில்;
அமர்ந்து சேலையால்
முகத்தை ஒற்றினேன்


24-11-2023