ஹரணி

சாமிநாதப் பிள்ளை
இறந்துபோனார்..

இணையக் காலக் கவியரங்கம். நாள் 24.11.23

சாமிநாதப் பிள்ளை
இறந்துபோனார்..

அவரை நினைத்ததும்
அகன்ற அந்த வேப்பமரமும்
அதன் கிளையில் கட்டப்பட்ட தண்டவாளத்
துண்டும் நினைவில் வந்தன…

நான் பள்ளியில் நுழைவதற்கு முன்பிருந்தே அவர்தான்
மண்யொலிப்பாளர்..

நான் பள்ளிப்படிப்பை
முடிப்பதற்கு முன்பே
அவர் பணியோய்வுப்
பெற்றுப் போயிருந்தார்…

இப்போது நான் பணியோய்வுப் பெற்று விட்டேன்..
அவர் நிரந்தர ஓய்வுப் பெற்று விட்டார்..

இறுதி ஊர்வலம் தொடங்கும் அவர் இல்லத்திற்குப் போனேன்..

கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்தார்
அவரின் கருத்துக் கைகளையும் அதன் மேல் தலைகவிந்திருந்த நரை முடிகளை மட்டுமே
பார்த்தேன்
வேறு பார்க்கத் தோனாமல்
வீட்டிற்குக் கிளம்பி
வந்து விட்டேன்…