ஔவையார்/தனிப்பாடல் திரட்டு

பெண்ணையாற்றில் பால் நெய்யாக பெருகி வருமாறு வேண்டல்

முத்து எறியும் பெண்ணை முதுநீர் அது தவிர்ந்து
தத்திய நெய்பால் தலைப் பெய்து – குத்துச்
செருமலைத்தெய் வீகன் திருக்கோவி லூர்க்கு வரும் அளவும் கொண்டாடி வா.

முத்துக்களை வீசிவரும் பெண்ணையாறே! நெடுங்காலமாக நின்னிடம் தருகின்ற நீரை மாற்றி நெய் பால் ஆகியவை குதித்து வரும்படி கொண்டு கனிகளை தாக்கிச் செரருமலைத் தெய்வீகரின் சிறுகோவலூர் கரைக்கு வரும் வரையில் ஓடி வருக.

என் உரை

நடக்காத ஒரு விஷயத்தைக் குறித்து ஔவையார் எழுதி இருப்பதை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.