
ஒரு அரளிச் செடியின் பக்கத்தில் அரைமணி நேரம் நிற்கமுடியுமா என்ன முடியாது தானே.? அவள் நின்றுகொண்டிருந்தாள் காலையிலிருந்து மாலைவரை. ஒரு பூவைப் பறிக்கவில்லை ஒரு இலையைக் கிள்ளவில்லை அதிமுக்கியமாக அரளிச் செடியை அவள் தொடக்கூட இல்லை. பக்கத்திலேயே நிற்பது எத்தனை பலம் என்று எல்லோர்க்கும் தெரியும்தானே.? நேற்று அந்த அரளிச் செடி அத்தனை பலமாக பரவசமாக இருந்தது இப்படித்தான் .
25.11.2023
தாராபுரம்

Excellent