புஷ்பா விஸ்வநாதன்/பயணத்தை நேசிப்பவர்களுக்கு

வாழ்க்கையே ஒரு நீண்ட பயணம்
வாழும் காலம் பலப்பல பயணங்கள்
ஊரு விட்டு ஊரு
நகரம் விட்டு நகரம்
நாடு விட்டு நாடு
கண்டம் விட்டு கண்டம்
பறந்து செல்லும் பறவைகள் நீங்கள்
உலக உருண்டை உங்கள் கரங்களில்

உணவும் வேறு உடையும் வேறு
பழகும் விதமும் வழக்கமும் வேறு
பறந்து சென்றால் பலப்பல அனுபவம்
உள்ளம் நிறையும் எண்ணம்
பலவிதம்.

இயற்கை அதிசயம் மனதை அள்ளும்
கோவில் குளம் நிம்மதி அளிக்கும்
செயற்கை கோட்டை அரண்மனை யாவும்
வாழ்க்கை அநித்தியம் நிலையாமை என்று
அறைந்து சொல்லும் இந்த உண்மையை

“படிப்பவர் அழிவர்;
படைப்புகள் வாழும்”

நடையுடை பாவனை வேறுபட்டாலும்
மனித குணமும் மனமும் ஒன்றே
மனிதநேயம் ஒன்றே சத்தியம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்த உண்மை புரிந்து போச்சு
சகிப்புத்தன்மை வளர்ந்து போச்சு
சகோதரத்துவம் மலர்ந்து போச்சு
தீவிரவாதம் ஒழிஞ்சு போச்சு

One Comment on “புஷ்பா விஸ்வநாதன்/பயணத்தை நேசிப்பவர்களுக்கு”

Comments are closed.