வளவ. துரையன்/தூறலும் தூற்றலும்


நசநசவென்று இந்த மழை தூறிக் கொண்டிருக்கிறது.

திறந்த வெளியில் எறும்புகளால் இரை இழுத்துப் போக முடியவில்ல

பூக்காரியின் நனைந்த பூக்களிலிருந்தும் அவள் கண்களிலிருந்தும் நீர் சொட்டுகிறது.

படித்தவுடன் வேலை கிடைப்பதாக எண்ணிக் கொண்டு மாணவர் பள்ளிக்கு ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்

நனைய விடாமல் செய்தித்தாள் போட அவன் பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்

தெருநாய்கள் ஒண்ட இடம் தேடி அலைவது பாவம்.

நேற்றுக் களத்தில் அடித்துப் போட்டதை இந்தத் தூறலில் தூற்றமுடியாதே என்று உழவன் வேதனைப் படுகிறான்

One Comment on “வளவ. துரையன்/தூறலும் தூற்றலும்”

Comments are closed.