சசிகலா விஸ்வநாதன்/எதிர்பாராததை எதிர் கொள்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்


சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
சனிக் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு



எதிர்பாராதது
எப்போதும் நம்
எதிர் நிற்கலாம்!
அதை அச்சமின்றி
எதிர் கொள்.
விழைவு கொண்டு,
பயம் கொன்று,
சாகசம் செய்வாய்.
நினைத்துப் பார்!
வேடன் வலை வீழ்ந்த
புறாக்களை!
தம் சக்திக்கும்,
இயல்புக்கும்,
அப்பாற்பட்ட நெருக்கடியில்
தம் துணிவு
ஒன்றே துணை
என்றுநிலை நின்றதினால் அன்றோ,
அவை உயிர் தப்பின!
எதிர்பாரா நிகழ்வுகளை
எதிர் நின்று,சமர் புரிவதே;
வாழ்வின் கவர்சுவை.
அதை சுவைத்திட;
வாழ்வில் விழைவும்,
இன் விளைவுகளும்
பெருமையும் பொங்கும்
அக்கணம் அனைவருக்கும்
தலைவன் என்ற
மணிமுடி உன்னைத்
தேடி வரும்


25-11-2023